குறள் : 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
மு.வ உரை :
ஐயுற முடியாத உருவத்தோடு பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
கலைஞர் உரை :
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
சாலமன் பாப்பையா உரை :
பிறர் சந்தேகப்படாத வேடத்?தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.
Kural 585
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum
Ukaaamai Valladhe Otru
Explanation :
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others) who fears no man�s face and who never reveals (his purpose).
இன்றைய பஞ்சாங்கம்
29-11-2021, கார்த்திகை 13, திங்கட்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 09.41 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 29.11.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,