ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் முதல் தவணை செலுத்துக்கொண்ட பலர் 2வது தவணை செலுத்திக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழ் நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கு பவர்களால் புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும். அப்படியே பரவினாலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், மற்றவர்களுக்கு தொற்றுவதற்கான வாப்புகள் மிகமிகக் குறைவாகும். பொதுமக்கள் சந்தேகம் காரணமாக கரோனா தடுப்பூசி செலுத் திக்கொள்ள தயங்குவதாலும், தாதமப்படுத்து வதாலும் புதிய வகை வைரஸ் தொற்று வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தென்ஆப்ரிக்காவில் புதியவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிவேகமாக பரவும் திறன் கொண்டது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உல நாடுகள் பலவும் நடவடிக் கைகளை தீவிரப்படுத்துயுள்ளது.

ஆகவே தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைவுப்படுத்தி வருகின்றது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சுமார் 3 லட்சத்து 18 ஆயிரம் டோஸ் கையிருப்பில் உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் முதல் தவணையும், இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள் தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு பிறகு 2வது தவணையையும் செலுத்திக்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை மாவட்த்தில் 2 தவணை செலுத் திக்கொள்னாத பொதுமக்கள் பொது இடங்களில் சஜகமாக நடமாட தடை செய்யப்படும் என்ற அரசாணை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் நாட்களில் நடை முறைபடுத்தப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள் உயிரிழப்புகளை தவிர்க்க தடுப்பூசியை செலுத்திக்கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து சஜக நிலைக்கு திரும்பிட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.