🌷 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார்.

🌷 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

🌷 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைக்கப்பட்டது.

🌷 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

🌷 1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூர் மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது.

🌷 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது.


நினைவு நாள் :-

🌷 1959ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஆல்ஃபிரெட் வெஜினர்

🌹 கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் 1880ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார்.

🌹 இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906 முதல் 2 ஆண்டுகாலத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார்.

🌹 கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ல் வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் 'கண்டப் பெயர்ச்சி' எனக் குறிப்பிடப்பட்டது. தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915ல் வெளியிட்டார். கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.

🌹 வாழ்நாளின் இறுதிக்காலம் வரை பல கோட்பாடுகளை கண்டறிந்த இவர் தனது 50வது வயதில் (1930) மறைந்தார்.