👉 1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் பிறந்தார்.

👉 1970ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சோவியத்தின் லூனா 17 விண்கலம் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது.

👉 2013ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தமிழக எழுத்தாளர், புஷ்பா தங்கதுரை மறைந்தார்.

முக்கிய தினம் :-


உலக அறிவியல் தினம்

🌐 ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அறிவியல் தினம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது.

🌐 நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தவும், அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

🌐 இத்தினத்தில், சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.


பிறந்த நாள் :-


மிக்கைல் கலாஸ்னிக்கோவ்

🔫 ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

🔫 இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார்.

🔫 1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

🔫 இதன் உச்சநிலையாக, 1947ஆம் ஆண்டு ஏகே-47 வகை தாக்குதல் துப்பாக்கியை உருவாக்கினார். இதன்பின் கலாஸ்னிக்கோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

🔫 கலாஸ்னிக்கோவ் இருமுறை சோசியலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் தனது 94வது வயதில் (2013) மறைந்தார்.