👉 1983ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பேஸ்புக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான கிரிஸ் ஹக்ஸ் அமெரிக்காவில் பிறந்தார்.

👉 1919ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய வரலாற்றாளர், ராம் சரண் சர்மா பிறந்தார்.


முக்கிய தினம் :-


இந்திய அரசியல் சாசன தினம்

👉 இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.

👉 இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூறும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால், அரசியல் சாசன தினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்

👉 பருமனற்ற உடலே பாதுகாப்பானது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

👉 கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக இருப்பதை உடல் பருமன் என்கின்றனர். அதிகமான கொழுப்பு சேருவது உடல் நலத்திற்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாகும். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


பிறந்த நாள் :-


எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன்

👉 சர்வதேச மருத்துவ அறிஞர் எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் 1948ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவின் ஹோபர்ட் என்ற இடத்தில் பிறந்தார்.

👉 இவரும், இவரது உதவியாளர் கரோல் டபிள்யு கிரைடர் என்பவரும் டி.என்.ஏ.விலிருக்கும் புதிய டெலோமியர்களை ஒன்றிணைத்து அவற்றின் நீள, அகலங்களைக் கட்டுப்படுத்தும் டெலோமெரிஸ் என்ற என்சைமை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர். இந்த அபாரமான கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள உயிரியலாளர்களுக்கு மரபணு செல்களின் சிக்கலான செயல்பாடுகளையும், அவற்றை இரட்டிப்பாக்கும் தன்மையைப் புரிந்துகொள்ளவும் வழிவகுத்தது.

👉 நுண்ணுயிரியலுக்கான எல்லி லில்லி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தனது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்ட்டர், ஜாக் சொஸ்டாக் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார். டெலோமியர்கள் மற்றும் புற்றுநோய் குறித்து இடைவிடாமல் உரையாற்றுவதிலும், கருத்தரங்குகள் நடத்துவதிலும் ஈடுபாடு உடையவர்.