ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய பாலத்தில் போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாலாற்றின் தற்போது அதிகபடியான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பழைய மேம்பாலத்தில் இரு புறங்களிலும் பெர்ரி கார்ட்  அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர், எனவே பொதுமக்கள் புதிய பாலத்தின் வழியாக வேலூர் மற்றும் ஆற்காடு பகுதிகளுக்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Traffic was blocked on the old flyover due to flooding in the lake