ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் அதிக மரங்களை வளர்க்க விதைப்பந்துகள் துவும் திட்டம் தொடங்கப்பட்டது. வாலாஜா யூனியன் சேர்மன் சேஷா வெங்கட் தலைமை வகித்தார். முகுந்தராயபுரம் பஞ்., தலைவர் அக்ராவரம் முருகன், யூனியன் துணை சேர்மன்-ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி விதைப்பந்துகள் துாவி திட்டத்தை தொடங்கி வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசினார்.
பின்னர் மலை உச்சி மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் விதைப்பந்துகள் தூவப்பட்டது. மலை முழுவதும் 1 லட்சம் விதைப்பந்துகள் துாவ திட்டமிடப்பட்டுள்ளது.
லாலாபேட்டை பஞ்., தலைவர் கோகுலன், தக் காம்பாளையம் பஞ்., தலைவர் மகேந்திரன், முகுந்த ராயபுரம் பஞ்., துணைத்தலைவர் சுரேஷ், இளைஞரணி நிர்வாகிகள் ஜெயக்குமார், மணிகண்டன், லோகேஷ், முன்னாள் பஞ்., தலைவர் பாலு, பாண்டியன், முரளி, பார்த்திபன், மூர்த்தி, மணி, கணபதி, தினேஷ், ஐயப்பன், தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.