ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 லட்சம் வரை தொழிற்கடன் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீதம், 35 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது...
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற வயது வரம்பு இல்லை . இளைஞர்கள் படிக்காத சேவை தொழிலுக்கு ₹5 லட்சம் , தொழில் கடன் ₹10 லட் சம் வரை பெறலாம் . ₹5 உற்பத்தி முதல்₹10 லட்சத்திற்கு மேல் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி , திட்ட மதிப்பீடு சேவை பிரிவிற்கு ₹10 லட்சங்கள் , உற்பத்தி நிறுவனத்திற்கு ₹25 லட்சங்கள் மானி யம் , நகரங்களில் 25 , கிரா மங்களில் 35 சதவீதம் அதிகபட்சமாக அனும்திக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாவட்டத் தில் உள்ள அனைத்து நகர் , கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது... இதனால் , ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் . மேலும் , விவரங் அறிய ராணிப்பேட்டை தேவராஜ் நகர் , எண் : 5 ல் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் சென்று சந்திக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .