Widespread rain in Ranipettai district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. கலவையில் அதிகபட்சமாக 30.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெரும் பாலான ஏரிகள் நிரம்பியுள்ளது. நீர்நிலைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.

அதேபோல், கலவை தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக கலவையில் 30.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மி.மீட்டரில்): 

அரக்கோணம் 10.6, 
ஆற்காடு 8.1. 
காவேரிப்பாக்கம் 21. 
வாலாஜா 18.2. 
அம்மூர் 13, 
சோளிங்கர் 17.