சென்னை தலைமைச்செயலகத்தில் பணியின்போது மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த பெண் காவலர் உடலுக்கு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் மரணம்


மறைந்த காவலர் கவிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் காந்திராணிப்பேட்டை மாவட்டம் காவனூரை சேர்ந்த பெண் காவலர் கவிதா, நேற்று முந்தினம் இரவு தலைமைச்செயலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பெய்த கனமழையில் மரம் முறிந்த விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் காவலர் கவிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.


பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு அமைச்சர் காந்தி அஞ்சலி

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் காவனூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கவிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.