ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; 
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கும், வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.

அதன்படி, 2021-22ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தனறு அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புபவர்கள் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை 29ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.