குறள் : 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்


மு.வ உரை :

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.


கலைஞர் உரை :

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா உரை :

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.


Kural 602

Matiyai Matiyaa Ozhukal Kutiyaik

Kutiyaaka Ventu Pavar


Explanation :

Let those who desire that their family may be illustrious put away all idleness from their conduct.





இன்றைய பஞ்சாங்கம்

16-12-2021, மார்கழி 01, வியாழக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 04.41 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் காலை 07.35 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் காலை 07.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். கிருத்திகை விரதம். சிவ-முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. 

இன்றைய ராசிப்பலன் - 16.12.2021

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும். 

ரிஷபம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது நல்லது.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

தனுசு

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகலாம். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் மனகவலைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology. 

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,