சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் உண்டி யல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோயில் உதவி ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் உதவி ஆணையர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமிகோயிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்பபணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கோயில் உதவி ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் உதவி ஆணையர் தியாகராஜன், கோயில் தீர்த்தகார் கேகேசி யோகேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில், யோக ஆஞ்சநேயர் கோயில், மலையடிவாரம், தக்கான்குளம் ஆகிய இடங்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோயில் கண்காணிப்பாளர் விஜயன், அரக்கோணம் ஆய்வர் பிரியா, திருத்தணி ஆய்வர் நிர்மலா ஆகியோர் மேற்பார்வையில் நேற்று நடந்தது.

இதில் 345 லட்சத்து 38 ஆயிரத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 156 கிராம் தங்கம். 240 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.