ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவும், குளிரும் இருந்தது. மழைக்காலம் முடிந்தது என்று மக்கள் பேசும் அளவுக்கு குளிர் வாட்டி எடுத்தது. இந்நிலையில் நேற்று காலை மேகம் சூழ்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

அதன்படி, காலை நேற்று 6 மணி முதல் மாலை 6 மணிவரை 12 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்: 
அரக்கோணம் 26.8 மிமீ 
ஆற்காடு 2.4 மிமீ 
காவேரிப்பாக்கம் 26 மிமீ 
வாலாஜா 3.5 மிமீ 
அம்மூர் 2.8 மிமீ 
கலவை 7.2 மிமீ 

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை 68.7 மிமீ 

மாவட்ட சராசரி 9.81 மிமீ ஆகும்.