வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணங்கள் அதிகரிக்கிறது செலவுகள் இன்னும் அதிகமாகும் உங்களுக்கு..!


வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

ஆனால் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்புக்கு பிறகு ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஜனவரி 1 2022ல் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் ஏடிஎம் பணம் எடுக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு புதிய கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளது.

தற்போதைய நிலவரப்படி வங்கிகளில் ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளும் முறை இருக்கிறது.

அதன் பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்த இந்த அறிவிப்பிற்கு பிறகு இனி 5 முறைக்கு மேலாக பணம் எடுக்கும் பொழுது அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு கட்டணம்


இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் 10 தேதி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பினை வெளியிட்டது.

5 பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் பணமில்லாத பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இலவச பரிவர்த்தனைகள்


இதில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும் மெட்ரோ இல்லாத நகரங்களில் 5 முறையும் இலவச பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும்.

ஜனவரி 1 இல் இருந்து 21 ரூபாய் கட்டணம் இதனுடன் வரியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே தற்போதைய கட்டண விகிதங்களை விட ஜனவரி முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

ஏற்கனவே அதிகரிப்பு


ஏற்கனவே ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இந்த நிலையில் ஜனவரி 1 முதல் மற்ற வங்கிகளும் இந்த கட்டணத்தை உயர்த்த இருக்கிறது.

இது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்பட உள்ளது, இது ஏடிஎம் இன் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ள, நிலையில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.

மக்களுக்கு இதனால் கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, ஏற்கனவே பெட்ரோல் விலை காய்கறிகள் விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில்.

இந்தக் கட்டணங்கள் உயர்வால் நடுத்தர மக்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

காய்கறி விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, மொபைல் ரீசார்ஜ் விலை, ஆகியவை மாதம் அல்லது ஆறு மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை சரியாக உயர்ந்து விடுகிறது.

இதனை எப்படி தவிர்க்கலாம்


நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் அந்த வங்கி ஏடிஎம் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

அதன்மூலம் நீங்கள் செலுத்தவேண்டிய பரிவர்த்தனை தொகை தவிர்க்கலாம்.

நீங்கள் இணையதளம் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்தால் இந்த பரிவர்த்தனை தொகையை நீங்கள் தவிர்த்து விடலாம்.

நகரங்களில் இருக்கும் ஏடிஎம் பயன்பாட்டை அதிக அளவில் நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.

மற்ற வங்கிகளின் ஏடிஎம் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் இதுவும் உங்களுக்கு செலவு செய்வதை தவிர்த்து விடும்.