ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, போன்ற தற்போது வான்கோழி இறைச்சி அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பப்படுகிறது நம் நாட்டில்.

விலை குறைவாகவும் அதே நேரத்தில் பல்வேறு வகையான ஆரோக்கியம் உடையதாக இருப்பதால். தற்போது வான்கோழி வளர்ப்பதற்கு அதிக மவுசு அதிகரித்துள்ளது.

இந்தப் பறவை இனம்மானது துருக்கி நாட்டில் இருந்து இங்கிலாந்திற்கு பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டுவரப்பட்ட இனமாக இருக்கிறது.

அந்த நாட்டின் பெயரால் (Turkey chicken) அதன் பெயர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆங்கிலேயர்கள் வருகையின்போது தான் இந்த வான்கோழி இனம் கொண்டுவரப்பட்டு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதைப்பற்றி 500 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு இடத்திலும் கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், சிற்பங்களிலும், உருவங்களிலும், இல்லை என்பதை மேற்கண்ட கருத்துகள் சான்றாக இருக்கிறது.

வான்கோழி இறைச்சி புரதசத்தின் சிறந்த வளமாக நிறைந்துள்ளது, அமெரிக்காவில் அதிகமாக சாப்பிடும் உணவுகளில் வான்கோழி இறைச்சி எப்போதும்.

முதன்மையாக இருக்கிறது அப்படிப்பட்ட இறைச்சியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

வான் கோழி இறைச்சியில் சில முக்கிய ஊட்டச்சத்துகளும் இருக்கிறது சில ஆரோக்கியமான நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது.

வான்கோழி இறைச்சி மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு பிரபலமான உணவாக இன்றுவரை இருந்து வருகிறது.

இந்த வான் கோழி இறைச்சியை இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் உறைய வைத்து அதன் மூலம் பாதுகாக்கலாம்.

இறைச்சியில் பல்வேறுவகையான கலோரிகள் ஊட்டச்சத்துக்கள் மதிப்புகள் அதிகமாக நிறைந்துள்ளது.

நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் விவரங்கள்

 • வைட்டமின் பி12
 • செலினியம்
 • இரும்புச் சத்து
 • மெக்னீசியம்
 • கால்சியம்
 • பொட்டாசியம்
 • சோடியம்
 • கொழுப்புச்சத்து
 • கார்போஹைட்ரேட்கள்
 • போலேட்
 • தசைகளை வலுப்படுத்தும்

புரதச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது உடல் தசைகளை வலுப்படுத்தும், உடற்பயிற்சி செய்பவர்கள் அதிகமாக வான்கோழிகளை எடுத்துக்கொள்ளலாம் உடல் எடை கூடுவதற்கு.

வான்கோழி இறைச்சியும் எளிதில் ஜீரணமாகும் என்பதால், வயதானவர்களுக்கு சிறந்த இறைச்சியாக எப்பொழுதும் இருக்கிறது.

இரத்த சோகை குணமாக்க

வான்கோழியில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின் b2 இரத்தசோகையை குணமாக்க உதவுகிறது அது மட்டுமில்லாமல் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மிகவும் அவசியம்.

என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது, அதிகளவு போலேட் மற்றும் வைட்டமின் பி12 இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அதன் தொடர்புடைய ரத்த சோகையை எதிர்த்து போராட உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

வான் கோழி இறைச்சியில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நேரடியாக இல்லை என்றாலும் அதில் உள்ள செலினியம் ஊட்டச்சத்து புற்றுநோய் எதிர்ப்பு பண்பை உருவாகும் தன்மையை கொண்டது.

தினசரி தேவைக்கு தேவையான 64% செலினியம் வான் கோழி இறைச்சியில் நிறைந்துள்ளது, செலினியம் ஊட்டச்சத்து புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டு இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வான்கோழி முட்டையின் நன்மைகள்


முட்டை ஒரு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு என்பது எல்லாருக்கும் தெரியும் முட்டையில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம்.


உலக அளவில் கோழி முட்டைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள் இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் வான்கோழி முட்டை அதிகமாக புகழ்பெற்ற உள்ளது.

இதனால் மக்கள் வான்கோழி முட்டைகளை வாங்க தொடங்கியுள்ளார்கள்.