ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை முத்துக்கடைவழியாகச் சென்ற தனியார் பேருந்தில் படிகட்டு உடைந்த நிலையில் இயங்கிவருவதாக பயணி ஒருவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனுக்கு புகாரினை வாட்ஸப் மூலம்தெரிவித்தார்.

வாட்ஸப்மூலம் வந்த புகாரின்பேரில், பேருந்தைக்கண்டு நடவடிக்கை எடுக்க மண்டல போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, பேருந்தைக் கண்டறிந்து போக்குவரத்து அலுவலர் ஆய்வுசெய்து பேருந்தின் தகுதிச்சான்றை ரத்து செய்து இயக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்து ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் உடனே புகார் அளித்த நபருக்குத் தகவல் தெரிவித்தார் . மேலும் பயணியும் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார் .

மேலும் இது தொடர்பாக மாவட்டத்தில்இயங்கும் அனைத்து தனியார்பேருந்துகளின் படிகட்டுகள் மற்றும் உள் தரைதளம் ஆகியவற்றை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ராணிப்பேட்டை மண்டலபோக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.