ராணிப்பேட்டை நகரில் குற்றங்களை தடுக்க காவல்நிலையம் சார்பில் 20 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு, இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் ராணிப்பேட்டை நகரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி. நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளான பைபாஸ் சாலை, ராஜேஸ்வரி தியேட்டர் சந்திப்பு. பழைய பஸ் நிலையம் மசூதி அருகில் பஜார். நவல்பூர் சந்திப்பு, முத்துக்கடை மற்றும் அம்மூர் ரோடு, வாலாஜா ரோடு, ஆற்காடு ரோடு, எம்பிடி ரோடு உள்ளிட்ட 20 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.