தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பிளாஸ் டிக் பாட்டில்களை அழிக்கும் மிஷின், இன்ஜின் டிரைவர்கள் அறை, ஏசி லோகோ ஷெட், ரயில்வே குடியிருப்புகளையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது சித்தேரி ரயில் பயணிகள் சங்கத்தினர், மின்சார ரயில்களை சித்தேரி வரை நீட்டிக்க வேண்டும். ஜோலார் பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை (வண்டி எண் 16085/86) சித்தேரியில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்ட மேலாளரிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து பொன்பாடியில் கட்டப்படும் பாலம், புத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றையும் கோட்ட மேலாளர் கணேஷ் பார் வையிட்டார். மாலை 5.20 மணிக்கு சிறப்பு ரயிலில் சென்னை திரும்பினார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜன.5ம் தேதி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்யவுள்ளார்.அதற்குமுன்னோட்டமாக கோட்ட மேலாளர் நேற்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.