ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அக்ராவரம் மலை மேடு ஜெ.ஜெ.நகரைச்சேர்ந்த நாகராஜ் மனைவி நாகம்மாள்(35). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்துவந்தார்.

நேற்றிரவு வேலை முடிந்து சிப்காட்டிலிருந்து ஜெ.ஜெ.நகர் நோக்கி நடந்து சென்றார். பொன்னை ரோடு மலை அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கிரேன் ஒன்று நாகம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகம்மாள் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நாகம்மாளுக்கு டிப்ளமோ படிக்கும் தினேஷ்குமார்(17) என்ற மகனும், பிளஸ் 1 படிக்கும் அமலா(16) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.