சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(48), லாரிடிரைவர்.இவர் கடந்த 19ம் தேதி அங்குள்ள தனியார் ஆலையில் இருந்து லாரியில் சிமென்ட்லோடு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென ஆறுமுகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே அவர். லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். 

பின்னர், மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியாக சென்றவர்கள் அவரிடம் கேட்டபோது தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அவரை உடன டியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் பரிதாபமாகபரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.