வேலூரில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூருக்கு மேற்கு-வடமேற்கே 50 கி.மீ., தொலைவில் இன்று 3:14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே கடந்த மாதம் 29-ம் தேதி இதே போன்றதொரு நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.
அதேபோல் நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அவ்வப்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.