திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பஞ்.ல் பழுதடைந்த கட்டடம் இடிப்பதற்கு அளவெடுத்த காட்பாடி யூனியன் கவுன் சிலர் நந்திவர்மனுக்கும் திமுக பஞ்., தலைவர் சோனியாவின் கணவர் திருமாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் கடந்த 24ம் தேதி திருவலம் போலீசில் புகார் செய்திருந்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரையும் நேற்று முன்தினம் போலீசார் விசாணைக்கு அழைத்திருந்தனர். அங்கு சென்ற திமுக, அதிமுக வினரிடையே மாதல் ஏற்பட்டது. இதில் குப்பத்தாமோட்டூர் பஞ். துணைத்தலைவர் சதீஷ்குமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல் திமுக தரப்பில் மாசிலாமணி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் தத்தம் கட்சியினருக்கு ஆதரவாக இரு கட்சியினரும் திருவலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நடவடிக்கை எடுக்க கோரினர். இதையடுத்து காட்பாடி டிஎஸ்பி பழனியின் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியாக திமுக தரப்பில் மாசிலாமணியிடம் புகார் பெற்று குப்பத்தாமோட்டூர் பஞ்.தலைவர் சோனியா வின் கணவர் திருமால், துணைத்தலைவர் சதீஷ்குமார், குருமூர்த்தி, மகேஸ் வரன், தங்கராஜ், ராஜேஷ், பழனி, பச்சையப்பன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில் மகேஷ்,திருமால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதிமுக தரப்பில் சதீஷ்கு மாரிடம் புகார் பெற்று நந்திவர்மன், வேல்முருகன், பஞ்சாட்சாரம், சுந்தர மூர்த்தி, பாலன், ரஜினி, கார்த்திக், முரளி, விஜய், ஜெகதீசன், கிருபாகரன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த குழுவில் கார்த்தி, ரஜினி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.