தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு
கொரோனா கட்டுப்பாடுகள் ஜன.10 வரை நீட்டிப்பு
சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
மழலையர், விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜன.10 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை
அனைத்து பொருட்காட்சிகள், புத்தக காட்சிகள் நடத்தப்படுவது ஒத்திவைப்பு
திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு
திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி
உணவகங்கள் செயல்பட கட்டுப்பாடு
உணவகங்கள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவு அருந்த அனுமதி
விடுதிகள் செயல்பட கட்டுப்பாடு
விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க உத்தரவு
துணிக்கடைகள் செயல்பட கட்டுப்பாடு
துணிக்கடைகள், நகைக் கடைகள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
மெட்ரோ ரயிலில் கட்டுப்பாடுகள்
மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
திருமண நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு
திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி
இறப்பு சார்ந்த நிகழ்வுக்கு கட்டுப்பாடு
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் பங்கேற்க அனுமதி
சலூன்களுக்கு கட்டுப்பாடுகள்
அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டுப்பாடுகள்
உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
பேருந்துகளில் பயணிக்க கட்டுப்பாடுகள்
பொது போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டும் அனுமதி