வயது 50 க்கு மேல் சென்றால் மட்டுமே நரைமுடி ஏற்படும் என்ற காலம் நிலை மாறி இப்பொழுது இருக்கும் உணவு முறைகளால் இளம் வயதில் நரை முடிகள் வளர ஆரம்பித்துவிடுகிறது.

நம்மில் பலரும் இந்த நரைமுடியை மறைப்பதற்கான செயற்கையான ரசாயனங்களை கலந்த ஹேர் டை பயன்படுத்தி வருகிறோம்.

இது போன்ற வேதிப்பொருட்கள் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகள் மற்றும் கடுமையான பக்க விளைவுகளையும் உடலில் ஏற்படுகிறது.

குறிப்பாக முடி உதிர்தல், முடி உடைதல், முடி வளராமல் போவது ஏற்படும், அதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் அதிக அளவில் ஹேர் டை பயன்படுத்தும் நபர்களுக்கு மயக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இயற்கை முறையில் ஹேர் டை செய்து அதனை பயன்படுத்தினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது மற்றும் உங்களுக்கு பணமும் செலவாகாது.

இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹேர் டை செய்வதற்கு தேவையான பொருட்கள்


  • மருதாணி இலை பவுடர்- தேவையான அளவு
  • உப்பு – ஒரு டீஸ்பூன்
  • சோளமாவு – இரண்டு டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- தேவையான அளவு
  • இண்டிகோ பவுடர் (அவுரி இலை) -தேவையான அளவு

உங்கள் முடியின் அளவுக்கு தகுந்தார்போல் இண்டிகோ பவுடர், மருதாணி இலை பவுடரை, எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மருதாணி இலை பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து காற்று புகாதவாறு இரவு முழுவதும் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

ஊறவைத்த மருதாணி பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து பின் பிரஷ் மூலம் தலைமுடி முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் நன்கு அலசிக் கொள்ளவும்,அப்பொழுது ஷாம்பு, சீயக்காய், போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஷாம்பு சீயக்காய் பயன்படுத்தினால் தலைமுடியில் சாயம் இறங்காது ஆதலால் உபயோகிக்க வேண்டாம்.

எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு முறை

தலைமுடி காய்ந்த பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு இண்டிகோ பவுடர் எடுத்து கொள்ளவும் பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து இதையும் தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தலைமுடியை நீரில் அலசிக் கொள்ளவும்.

மறு நாள் அல்லது 2 நாள் கழித்து நல்லண்ணை தேய்த்து குளிக்கவும் இப்பொழுது முடி இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்.