உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவும் அபாயமான சூழல் நிலவி வுருகிறது. கடந்த 2019, ஜனவரியிலிருந்து உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தொடங்கியது. தொற்றினைத் தடுக்க மத்திய அரசு அதே ஆண்டு மார்ச் 24 முதல் நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அமுல்படுத்தியது. பின்னர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதன் மூலம் நோய்ப் பரவல் பெருமளவில் குறைந்து வருகிறது.
இந்நிலையில், "ஒமிக்ரான் வைரஸ்" என்ற புதியவடிவில் இந்தியாவிற்குள் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக முக்கவசம் அணியாமல் வெளியே, பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து் ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ளப் பொது இடங்களில் முகக்கவசமின்றி இருப்பவர்களைக் கண்டு அபராதம் விதிக்கும்படி வருவாய்த்துறை சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.