கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயது நபருக்கு ஒமிக்ரான் உறுதியானதாக தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆந்திரா வந்தவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆந்திர சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதேபோல், சண்டிகரிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதையடுத்து தமிழகத்தில் உஷார்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை நெருங்கும் ஒமிக்ரான் பாதிப்பு ; அண்டை மாநிலங்களில் உறுதியானது!