மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை (டிசம்பர் 13) முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை: இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா நோய் மூன்றாவது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதல்படி கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே டிசம்பர் 13ஆம் தேதி (நாளை) முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்க்காணும் ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.