ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி சாலையில் ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் ஒரு பஸ் ஸ்டாப் இருந்தது. 
இந்த பஸ் ஸ்டாப் இடிக்கப்பட்டு அதை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பிறகு அமைச்சர் காந்தியின் நிதி ஒதுக்கீட்டில் புதிய நவீன பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது. சாலையை விட்டு ஒதுக்குபுறமாக வந்து பஸ்ஸ்டாப் அருகே நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்கள் செல்லும் வகையில் இந்த புதிய பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாப் கட்டி முடிக் கப்பட்டதும் போக்குவரத்து போலீசார் இங்கு நின்று பஸ்கள் உள்ளே வந்து செல்லும்படி ஒழுங்கு படுத்தினர். அதன் பிறகும் பஸ்கள் உள்ளே வராமல் சாலையோரம் நின்று விட்டு அப்படியே செல்கிறது.

இதை பார்த்த பயணிகள் பஸ் ஸ்டாப்பிலிருந்து ஓட முடியாமல் அவர்களும் சாலையோரம் போய் நின்று பஸ் ஏறுகின்றனர். இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாப்பை ஆக்கிரமித்து சிலர் வாகனங்களை நிறுத்துவதால்தான் பஸ்கள் உள்ளே வந்து செல்ல முடியவில்லை.

மேலும் பலர் இங்கு வந்து உட்கார்ந்து அரட்டை அடிக்கின்றனர். அதனாலும் பஸ் ஸ்டாப்புக்கு பயணிகள் வந்து உட்காருவ தில்லை.  பஸ்களும் உள்ளே வந்து செல்வதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் இப்படி வீணாகலாமா? சம்பந்தப் பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாப்பை ஆக்கிரமிப்பவர்களை எச்சரிக்க வேண்டும்.

பயணிகள் பயன்பாட்டுக்காக இந்த பஸ் ஸ்டாப்பை முழுவதுமாக கொண்டு வரவேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோருகின்றனர்.