ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் உலக மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் இந்திய அரசியலைப்பு சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாறஉறுதி மொழிகிறேன் .எவ்வித வேறுபாடுமின்றி் அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.என்னுடைய எண்ணம் , சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன் .மனிதஉரிமைகள் மேம்படுவதற்கு நான் எப்போது ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் வாசித்தார்.

அனைத்து தறை அலுவலர்களும் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றனர்.உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகம்மது அஸ்லம், ,வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம் , ,துணை ஆட்சியர்கள் சேகர்,சுரேஷ், தாரகேஸ்வரி, வட்டாட்சியர்கள் விஜயகுமார்,பாபு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.