ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஆற்காடு அருகே உள்ள கொல்லப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன்
தனுஷ் (20) அதே பகுதியில் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ் (21) இருவரும் நேற்று காலை 10 மணியளவில் சுங்குவார்சத்திரம்
அருகேயுள்ள தனியார் கம்பெனியில் வேலை தேட இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத கனரக வாகனம் பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக்கை ஓட்டி வந்த தனுஷ் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் உட்கார்ந்து வந்த தினேஷ் சிறிது படுகாயமடைந்த நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம் மற்றும் அதன் டிரைவரை காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராஜன் உள்ளிட்ட போலீசார் தேடி வருகின்றனர்.