அரக்கோணம் தாலுகா இன்ஸ் பெக்டராக சேதுபதி பணியாற்றி வருகிறார். தக்கோலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதியவர் வரதராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் பிடிப்படவில்லை.
மேலும் இந்த வழக்கில் எந்வித முன்னேற்றமும் இல்லை. அதோடு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் செயின் பறிப்பு மட்டுமின்றி சித்தேரி மெயின் ரோட்டில் ஒன்றரை பவுன் செயின் பறிப்பு சம்பவமும் நடந்தது. இந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சேதுபதி திடீரென ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி தீபா சத்யன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் செயின் பறிப்பு வழக்கை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி விசாரிக்கிறார். தாலுகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சேதுபதி ஆயுதப்படைக்கு மாற்றியது குறித்து எஸ்பி தீபா சத்யனிடம் கேட்டதற்கு, அவருக்கு சிறிய அளவிலான தண்டனை தரப்பட்டது. 2 நாள் ஆயுதப்படையில் இருந்தார்.
இப்போது அவர் 2 நாள் விடுமுறையில் இருக்கிறார். வரும் 13ம் தேதி ஸ்டேஷனுக்கு மீண்டும் வந்துவிடுவார் என்றார்.