ஆம்பூர் அருகே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்து காதலி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை. ஜோலார்பேட்டை தொடர்வண்டி காவல்துறை விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்த பிரியங்கா தேவி (வயது 16 , 11ஆம் வகுப்பு மாணவி ) இவர் இன்று காலை அதே பகுதியில் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பிரியங்கா தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமணன்(வயது 21, எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார்) என்பவரை கடந்த 1ஆண்டாக காதலித்து வந்ததாகவும் அவருடன் நேற்று செல்போனில் சண்டை போட்டு கொண்டதால் நேற்று இரவு ரமணன் அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பிரியங்கா தேவி இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.