திருவலம் பொன்னையாற்றின் மீது உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தின் 38, 39வது கண் பாலங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த 3 நாட்களாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புதிய மேம் பாலத்தின் வழியாக சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 38வது கண் பாலத்தின் கீழ் இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்தது. 39வது கண்ணில் நேற்றிரவு நிலவரப்படி பாதி வேலை முடிந்தது. இன்று மீதி வேலை முடியும். இந்நிலையில் அதே பாலத்தின் 28,29 வது கண்ணில் விரி AA AQசல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஆனாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் இரும்பு அமைக்கும் பணி பாலம் முடிவடைவதால் அதன் உறுதித் தன்மையை சோதிக்க இன்று சிறப்பு நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்கின்றனர்.
ஒரு ரயில் இந்த பாலத்தின் மீது ஓடும்போது குறைந்தபட்சம் 5 ஆயிரம் டன் எடை இருக்கும். அதை தாங்கும் நிலையில் தாற்காலிக இரும்பு பாலங்பாலங்கள் இருக்கிறதா? என்று இன்று வரும் நிபுணர் குழு சோதிக்கும்.

அவர்கள் சான்று அளித்தவுடன் முதலில் 10 கி.மீ., வேகத்தில் இன்ஜின், ரயில் பெட்டிகள் இயக்கி சோதனை செய்யப்படும். அதன் பிறகு ரயில்கள் இந்த பாலத்தின்  மீது நிதானமாக  செல்லும் வகையில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

மேலும் இந்த பாலத்தின் மீது ரயில் செல்வதை கண்காணிக்க சிறப்பு பாராமரிப்பு குழு இந்த பகுதியில் தொடர்ந்து இயங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.