15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இப்போது நாட்டில் தடுப்பூசி போடத் தொடங்கும். 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக லைவ்-ல் தோன்றி உரையாற்றினார். கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார். அப்போது இந்தியாவிலும் பலருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் பீதி அடைய வேண்டாம், கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. கை கழுவுதல், மாஸ் அணிதல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கொரோனா உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய அனுபவம், தனிப்பட்ட மட்டத்தில் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த ஆயுதம் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது ஆயுதம் தடுப்பூசிஇந்தியா தனது குடிமக்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடத் தொடங்கியது. நாட்டின் அனைத்து குடிமக்களின் கூட்டு முயற்சி மற்றும் கூட்டு விருப்பத்தால் இன்று இந்தியா முன்னோடியில்லாத மற்றும் மிகவும் கடினமான இலக்கான 141 கோடி தடுப்பூசி அளவைக் கடந்துள்ளது. இன்று, இந்தியாவின் வயது வந்தோரில் 61 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுதியுள்ளனர். இதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டோர்களில் சுமார் 90 சதவீதம் பேர் தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இப்போது நாட்டில் தடுப்பூசி போடத் தொடங்கும். 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.