அதிக நபர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் உடம்பெல்லாம் நல்ல ஒளியாக இருக்கு ஆனால் வயிற்றுப்பகுதி மட்டும் பெருசாக இருக்கு அசிங்கமா இருக்கு.

இதனால் தொப்பையை குறைப்பது என்பது அனைவருக்குமே மிகவும் கடுமையான ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு பழக்கவழக்கங்கள்.

வாழ்க்கை முறை, மன அழுத்தம், அதிக தூக்கமின்மை, வேலைப்பளு, மது அருந்துதல், புகை பிடித்தல், கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம், தரமற்ற எண்ணெய்யால் செய்யப்படும் உணவுகள் என பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நமக்கு தொப்பை வருவதற்கு அதிக காரணங்கள் இருக்கிறது இருப்பினும் இந்த தொப்பையை குறைக்க நாம் நமது உடலை போட்டு வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வகையான உணவுக் குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் போதும் உங்களுடைய தொப்பை மிக எளிதாக விரைவாக குறைந்துவிடும், இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்க மீன் மாத்திரை


தொப்பை குறைக்க விரும்பும் நபர்கள் மீன் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம் அதாவது மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன் எண்ணெய் மாத்திரைகளை.

நீங்கள் சாப்பிடுவதன் மூலம் இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து விடுகிறது.

உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறினால் உடல் கச்சிதமாக அழகாக தோற்றமளிக்கும்.

நார்ச்சத்து உணவு வகைகள்


குறிப்பாக நார்ச்சத்து உணவுகளை நீங்கள் சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானம்மாகிறது, ஆகவே நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் அன்றாடம் காலை மற்றும் இரவு உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக தானியங்கள், ஓட்ஸ், போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் நார்ச்சத்து உணவுகள் செரிமானம் அடைவதற்கு சற்று அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

இருந்தாலும் உங்களுக்கு தேவையில்லாமல் பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும் இதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.

சீரகம்


அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிதளவு இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

கலவையை நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும் பின் ஒரு எலுமிச்சை பழத்தை சிறு துண்டாக நறுக்கி கொதிக்க வைத்த நீரில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பின்பு சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பித்துவிடும்.

காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்


தொப்பையை குறைக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் காலை உணவை தவிர்க்க கூடாது, காலை உணவு என்பது உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏனென்றால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் முழுவதும் காலை சாப்பிடும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது எனவே தூங்கி எழுந்ததும் ஒரு மணி நேரத்தில் காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்.

இது உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ளும் தொப்பையை குறைக்க வேண்டும்.

என்று காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு தொப்பை தான் அதிகமாகிக்கொண்டே போகும், எனவே இந்த தவறை ஒரு போதும் நீங்கள் செய்து விடாதீர்கள்.

இரவு 8 மணிக்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும்


பொதுவாக நமது வீட்டுப் பெரியவர்கள் காலை உணவை ராஜாவையும் போலவும், மதிய உணவை இளவரசன் பலம், இரவு உணவை பிரச்சனைகளை போலவே சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் காலை மற்றும் மதிய உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் இரவில் நாம் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் அதுவும் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும், எளிதில் ஜீரணமாகும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

மேலும் தேவையற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அது மட்டுமில்லாமல் இரவில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள், பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். பேக்கரி உணவுகளையும் தவிர்த்து விடுங்கள்.