குறள் : 593

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்.

மு.வ உரை :

ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர் ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

கலைஞர் உரை :

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :

ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

Kural 593

Aakkam Izhandhemendru Allaavaar Ookkam
Oruvandham Kaiththutai Yaar

Explanation :

They who are possessed of enduring energy will not trouble themselves saying �we have lost our property.�



இன்றைய பஞ்சாங்கம்

07-12-2021, கார்த்திகை 21, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 11.41 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 12.11 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 12.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. 

இன்றைய ராசிப்பலன் - 07.12.2021

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் அமையும். பகைவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்க முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். அடுத்தவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,