குறள் : 601
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடு
மு.வ உரை
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்
கலைஞர் உரை
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்
சாலமன் பாப்பையா உரை
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்
Kural 6
Kutiyennum Kundraa Vilakkam Matiyennu
Maasoora Maaindhu Ketu
Explanation
If (a king) enjoys privately the things which he desires the designs of his enemies will be useless
இன்றைய பஞ்சாங்கம்
15-12-2021, கார்த்திகை 29, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நாள் முழுவதும் பரணி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 15.12.2021
மேஷம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தயோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வம் குறைந்து காணப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,