குறள் : 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

மு.வ உரை :

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன் தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

கலைஞர் உரை :

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

சாலமன் பாப்பையா உரை :

இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

Kural 615

Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir
Thunpam Thutaiththoondrum Thoon

Explanation :

He who desires not pleasure but desires labour will be a pillar to sustain his relations wiping away their sorrows.


இன்றைய பஞ்சாங்கம்

29-12-2021, மார்கழி 14, புதன்கிழமை, தசமி திதி மாலை 04.12 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 02.38 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 29.12.2021

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் பெருகும், மறைமுக பகை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மிதுனம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் மனக்குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். செய்யும் செயல்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். செலவுகள் குறையும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். 

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் தீரும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். வீண் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருக்கவும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,