அரக்கோணத்தில் பாதாள சாக்கடைக்காக 366 ரோடுகளும் தோண்டி போடப்பட்டது.

இந்த ரோடுகள் பகுதி, பகுதியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. பலசிமென்ட் ரோடுகள் பேட்ச்ஒர்க் மட்டுமே செய்யப்பட்டு சரி செய்யப்பட்டது.
அதிகளவு சேதமடைந்த ரோடுகள் மீது புதியதாக சிமென்ட்ரோடு போடப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு புதியதாக ரோடுகள் போடும் போது ஏற்கனவே இருக்கும் ரோடுகளை அகற்றிவிட்டு பழைய ரோட்டின் மட்டத்துக்கே ரோடு போட வேண்டும். ஏனெனில் ரோடு மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால் வீடுகள் பள்ளத்தில் சென்றுவிடுகிறது.

இதனால் கழிவுநீர் வெளியேற்றுவதில் இருந்து பல பிரச்னைகள் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அரக்கோணத்தில் 14 கோடி ரூபாய் செலவில் ரோடு மற்றும் பார்க், கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் அரக்கோ ணம் நேருஜிநகர் அரசு தொடக்கப்பள்ளி அமைந் துள்ள ரோடு, அதற்கு பக்கத்து தெரு பாதாள் சாக்கடைக்காக தோண்டி யதில் சிமென்ட்ரோடு ஆங்காங்கே பள்ளமாக இருந்தது.

இந்நிலையில் தலைமை செயலர் உத்தரவுக்கு ஏற்ப நேருஜிநகர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள ரோடு, அதன் பக்கத்து தெரு முழுவதும் பொக்லைன் இயந்திரத்தில் கொத்தி அகற்றப்பட்டது. அங்கு பேவர் பிளாக் ரோடு போடப்படவுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் கிடைக்கும். மழை ஒய்ந்த நிலையில் பல தெருக்களில் ரோடு போடும் பணிகள் விரைவில் தொடங்கப்புடவுள்ளது.

அதேநேரம் பழைய ரோடு இருந்த மட்டத்துக்கே ரோடு போடப்பட இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.