தடம் புரண்டதால், தண்டவாளத்தில் இருந்து இறங்கிய காலி ரயில் பெட்டி


சென்னை திருநின்றவூரில் இருந்து, ஆந்திராவின் ரேணிகுண்டாவுக்கு இரும்பு ரோல்கள் லோடு ஏற்றும், 43 காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

அரக்கோரணம் அருகே மோசூர், புளியங்குளம் இடையே, நேற்று அதி காலை 5.45க்கு, சரக்கு ரயிலின் பெட்டியொன்று தடம்புரண்டு, ஜல்லி கற்களில் புதைந்தது. ரயில் பெட்டி தடம் புரண்டதால் ஏற்பட்ட சத்தத்தை உணர்ந்த டிரைவர் உடனடியாக இன்ஜினை நிறுத்தினார்.
தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்தனர். ரயில்வே ஊழியர்களின் மீட்பு நடவடிக்கையால் காலை 9.30க்கு, அந்தப் பாதையில் போக்குவரத்து சீரானது.

விபத்து நிகழ்ந்த தடத்தில், 4 தண்டவாளங்கள் உள்ளதால், விரைவு ரயில்கள் தடையின்றி இயக்கப்பட்டது. விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.