👉 1972ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அப்பல்லோ 17விண்கலம் சந்திரனில் இறங்கியது.

👉 2004ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார்.


முக்கிய தினம் :-


சர்வதேச மலைகள் தினம்

🌷 மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு இத்தினத்தை உருவாக்கியது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா.சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.


பிறந்த நாள் :-


சுப்பிரமணிய பாரதியார்

🌹 தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.

🌹 இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும், முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது.

🌹 இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.

🌹 ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்திய மகாகவி தன்னுடைய 38வது வயதில் (1921) மறைந்தார்.


பிரணாப் முகர்ஜி

🌺 13வது இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். 1952-1964ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இவர், 1969ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 

🌺 இவர் ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-1984ஆம் ஆண்டு நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-1989ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார்.

🌺 இவர் 2004-2006ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-1996, 2006-2009 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராக செயல்பட்ட இவர், 2012ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


விஸ்வநாதன் ஆனந்த்

🌻 இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் 1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை என்ற இடத்தில் பிறந்தார்.

🌻 1987ஆம் ஆண்டு உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

🌻 இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அர்ஜுனா விருது(1985), பத்ம ஸ்ரீ விருது(1987), தேசிய குடிமகன் விருது(1987), ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது(1991), புக் ஆஃப் தி இயர் விருது(1998), பத்ம பூஷண் விருது(2000), சதுரங்க ஆஸ்கார் விருது(ஆறுமுறை), பத்ம விபூஷண் விருது(2007) போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.