🌹 1981ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி புகழ்பெற்ற இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சண்டிகரில் பிறந்தார்.
🌹 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச கன உலோக தினம்

👉 சர்வதேச கன உலோக தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.

👉 இத்தினத்தில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கன உலோகங்களினால் வாசிக்கப்பட்ட ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது. வீடுகள், வேலை செய்யும் இடங்கள், கார் ஆகியவற்றிலும் இச்சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.


சர்வதேச கரலாகட்டை தினம்

🌟 டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.


பிறந்த நாள் :-


ரஜினிகாந்த்

🌸 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். 

🌸 ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் 'சென்னை திரைப்படக் கல்லூரியில்' சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

🌸 ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

🌸 இவர் தமிழக அரசு திரைப்பட விருது, கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பத்ம பூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.

👉884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

👉1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.

👉1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.

👉1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.

👉1815 – பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.[1]

👉1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.

👉1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.

👉1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.

👉1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.[2]

👉1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் “S” [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.

👉1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

👉1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.

👉1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.

👉1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.

👉1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.

👉1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.

👉1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.

👉1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.

👉1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.

👉1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.

👉1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.

👉1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

👉1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

👉1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.

👉1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.

👉1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.

👉1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.

👉1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

👉1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

👉1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

👉2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.



இன்றைய தின பிறப்புகள்.


👉1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)

👉1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)

👉1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)

👉1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)

👉1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)

👉1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)

👉1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)

👉1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1990)

👉1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி

👉1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்

👉1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)

👉1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்

👉1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்

👉1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

👉1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்

👉1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)

👉1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை

👉1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

👉1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

👉1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்.


👉1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)

👉1921 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)

👉1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)

👉1940 – தியாகி விஸ்வநாததாஸ், நாடக நடிகர், தேசியவாதி (பி. 1886)

👉1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)

👉1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)

👉2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)

👉2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

👉2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)

👉2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)

👉2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)

இன்றைய தின சிறப்பு நாள்.


👉விடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)