👉 1851ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் விடப்பட்டது.


பிறந்த நாள் :-


இராமானுஜன்

🌟 இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

🌟 இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

🌟 இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.

🌟 இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (Magic Squares), தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.

🌟 ராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

🌟 1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

🌟 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு தனது 32வது வயதில் மறைந்தார்.


சாரதா தேவி

🌷 இராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து, ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் பிறந்தார்.

🌷 தன்னுடைய கணவர் இராமகிருஷ்ணர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றுக் கொண்டு தானும் துறவு வாழ்க்கையை வாழ்ந்தார்.

🌷 பரமஹம்சரிடம், இவர் சீடர்கள் சிரமப்படுவதை எடுத்து கூறி இராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கு காரணமானார். அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண மடம் 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனவே இவரை சங்க ஜனனி என்று போற்றினார், விவேகானந்தர்.

🌷 மொத்த உலகமும் உங்கள் சொந்தம் என்று உபதேசித்த அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 66வது வயதில் (1920) மறைந்தார்.



இன்றைய தின நிகழ்வுகள்.


👉69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

👉401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.

👉880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.

👉1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

👉1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.

👉1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.

👉1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.

👉1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

👉1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

👉1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

👉1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.

👉1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.

👉1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக ‘323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

👉1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

👉1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

👉1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.

👉1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.

👉1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

👉1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.

👉1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.

👉1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

👉1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.

👉1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

👉1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.

👉2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.

👉2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


👉1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)

👉1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)

👉1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)

👉1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)

👉1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)

👉1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)

👉1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. [1946)

👉1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)

👉1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)

👉1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)

👉1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000

👉1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்

👉1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள்


👉1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்

👉1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)

👉1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)

👉1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)

👉2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)

👉2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)

👉2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)

👉2020 – அப்துல் ஜப்பார், தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (பி. 1939)

இன்றைய தின சிறப்பு நாள்


👉அன்னையர் நாள் (இந்தோனேசியா)

👉தேசிய கணித தினம் (இந்தியா)

👉ஆசிரியர் நாள் (கியூபா)