👉 1949ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர், சையத் கிர்மானி சென்னையில் பிறந்தார்.

👉 1993ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உலகின் மிகப்பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.


பிறந்த நாள் :-


ராஜேஷ் கன்னா

🌟 இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.

🌟 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை பெற்றார்.

🌟 இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை 'இந்தித் திரையுலகின் சிவாஜி' என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.

🌟 இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.

🌟 இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 69-வது வயதில் (2012) மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.


குவெம்பு

✍ இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார்.

✍ 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

✍ இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும்.

✍ இவர் பத்ம பூஷண், பத்மவி பூஷண், சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் தன்னுடைய 89வது வயதில் (1994) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


👉875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார்.

👉1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..

👉1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.

👉1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

👉1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

👉1845 – டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

👉1851 – அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.

👉1874 – எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.

👉1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.

👉1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

👉1911 – மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.

👉1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

👉1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

👉1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

👉1975 – நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

👉1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

👉1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.

👉1996 – குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

👉1997 – ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

👉1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

👉2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.

👉2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.

👉2013 – உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்


👉1709 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762)

👉1766 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843)

👉1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)

👉1844 – உமேஷ் சந்திர பானர்ஜி, இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவர் (இ. 1906)

👉1893 – ராசிக் பரீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1984)

👉1904 – குவெம்பு, இந்தியக் கவிஞர் (இ. 1994)

👉1910 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2013)

👉1914 – பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ, சாக்சபோன் கலைஞர் (இ. 1989)

👉1930 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 2000)

👉1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்.

👉1942 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2012)

👉1945 – பிரேந்திரா, நேப்பாள மன்னர் (இ. 2001)

👉1953 – தாமசு பாக், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவர், செருமானியர்.

👉1953 – ஆலன் ரஸ்பிரிட்சர், சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளர்.

👉1960 – டேவிட் பூன், ஆத்திரேலியத் துடுப்பாளர்.

👉1974 – டுவிங்கிள் கன்னா, இந்திய நடிகை.

இன்றைய தின இறப்புகள்


👉1170 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118)

👉1720 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670)

👉1825 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (பி. 1748)

👉1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளாதார அறிஞர் (பி. 1766)

👉1890 – எகாக்கா கிளெசுக்கா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1826)

👉1912 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1834)

👉1926 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரியக் கவிஞர் (பி. 1875)

👉2009 – பழ. கோமதிநாயகம், தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநர்

👉2012 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், ஊடகவியலாளர் (பி. 1946)

👉2015 – தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)

இன்றைய தின சிறப்பு நாள்


👉விடுதலை நாள் (மங்கோலியா)