ராணிப்பேட்டை பகுதிகளில் பைக்குகளை திருடிய சிவா மற்றும் ராஜேஷிடமிருந்து 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை பகுதிகளில் திருடப்பட்ட 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து வேலூரை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன், டிஎஸ்பி பிரபு ஆகியோர் உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, துரையரசன், திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ராஜேஸ்வரி தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் வேலூர் காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா(24). வேதராஜ் (எ) ராஜேஷ்(22) என்பதும், இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை, முத்துக்கடை, நவல்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிந்து அவர்களிட மிருந்து 5.80 லட்சம் மதிப்புள்ள 5 பைக்குகளை பறி முதல் செய்தனர். பின்னர் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.