ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 15 வயது சிறுமியை வானாபாடி மாணிக்கம் நகரைச்சேர்ந்த மணிகண்டன்(19) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி (பொறுப்பு), சப் இன்ஸ் பெக்டர் உஷா ஆகியோர் விசாரணை நடத்தி, வாலிபர் மணிகண்டனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.