ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை கீழாண்ட வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெல் ஊழியர் மணியின் மகன் சதீஷ் (28). இவர் பத்தாம் வகுப்புவரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரது தாய் ராணி கடந்த 10 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். சதீஷின் அண்ணன்கள் மனோகரன் தினேஷ்.

இந்நிலையில் சதீஷின் சிறிய அண்ணன் தினேஷிற்கு கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ் வேலைக்கு எதுவும் செல்வதில்லை என கூறப்படுகிறது. சதீஷை வேலைக்கு போகாமல் இருந்தால் எப்படி என இவரது அண்ணி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் அவரது அண்ணியை நேற்று மாலை தாக்கியுள்ளார். இதனையடுத்து சதீஷ் தனது அண்ணனுக்கு பயந்து நேற்று மாலை வீட்டின் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்த்தசாரதி சப் இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.