குறள் : 626
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்
மு.வ உரை :
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
கலைஞர் உரை :
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
சாலமன் பாப்பையா உரை :
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.
Kural 626
Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar
Explanation :
Will those men ever cry out in sorrow we are destitute who (in their prosperity) give not way to (undue desire) to keep their wealth.
இன்றைய பஞ்சாங்கம்
08-01-2022, மார்கழி 24, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 10.43 வரை பின்பு வளர்பிறை சப்தமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் 08.01.2022
மேஷம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் புரிவோர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியில் இருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.
மகரம்
இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிலும் சிக்கனம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001