ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய் பரவலை தடுக்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கி இன்று வரை முழு ஊரடங்கு, தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் விதியை மீறி நோய் பரவலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக் கப்படுகிறது. விதி மீறியவர்களை சுகாதாரத்துறை, போலீஸ், வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை தனித்தனியாக குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த கண் காணிப்பு குழுவினர் வீட்டு தனிமை மீறல், பொது இடத்தில் எச்சில் துப்பியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, வணிக வளாகங்கள், ஜிம், அழகு நிலையங்களில் கரோனா விதி மீறல், தடை செய்யப்பட்ட பகுதியில் விதி மீறியவர்களுக்கு அபாரதம் விதிக்கின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கி நேற்று வரை கரோனா விதி மீறியவர்களுக்கு அபராத மாக ரூ.1.66 கோடி விதிக்கப்பட்டுள்ளது.